இந்தியாவின் பிரதமர் மோடியின் தலைமையை நீங்கள் நம்பியதால் தான், 500 வருட கால போராட்டத்திற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பிரதமர் மோடியின் தலைமை தான் காரணம். ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டதாக இருந்த இந்தியா, இன்று உலகை வழிநடத்தி வருகிறது என்று பேசி இருக்கிறார்.
