யூரோ 2020 இறுதிப்போட்டியை பார்த்துவிட்டு, மறுநாள் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தாமதமாக வரலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொள்ளும் யூரோ 2020 இறுதிப் போட்டி, ஞாயிற்று கிழமை அன்று நடக்கிறது. இதனை பலரும் ஆர்வமுடன் பார்ப்பார்கள். எனவே திங்கட்கிழமை அன்று சில பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தாமதமாக வர அனுமதித்திருக்கிறது. அதாவது சுமார் 55 வருடங்களுக்கு பின்பு, தற்போது தான் இங்கிலாந்து அணி முதல் தடவையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. […]
