பாகிஸ்தானிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்திலும், செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அந்த யூடியூப் சேனல்களில் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், அயோத்தி, ஜெனரல் பிபின் ராவத் மறைவு போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பியது தெரியவந்தது. அதன்பின்னர் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலர் அபூர்வ சந்திரா இதுகுறித்து யூடியூப் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அந்த […]
