யுனைடெட் கிங்டமில் பெண் ஒருவர் தனது முடியை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவர் வயிற்றில் அந்த முடி பந்து போன்று உருவாகியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 17 வயது பெண் ஒருவர் வயிற்றில் இருந்து 48 சென்டி மீட்டர் நீளமுள்ள முடி பந்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தனது சொந்த முடியை பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு பந்து போல் உருவாகியுள்ளது. டாக்டர்கள் அந்த பெண்ணிற்கு ட்ரைக்கோபாகியா என்ற நோய் இருப்பதாக கண்டறிந்தனர். […]
