ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் வாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மாணவர்கள் தங்களுடைய திறமை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித்தகுதியை சுயமாக நிர்ணயித்துக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பட்டப்படிப்புகளுக்கான பாடங்களை படிப்பது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஒரு […]
