வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு உணவு சாப்பிட வந்த யானை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கனபள்ளி, நேர்லகிரி மகாராஜகடை உள்ளிட்ட வனப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருக்கின்ற நிலையில் இவை அடிக்கடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கொங்கனபள்ளி ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டம் ஒன்றில் பலாப்பழத்தை சாப்பிட்டு […]
