கோவை மாவட்டம் வால்பாறையில் பல எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தது. அவை திடீரென தொழிலாளர்களின் வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தி அட்டுழியம் செய்தது. இதனையடுத்து யானைகள் அந்த வீட்டிலிருந்த உணவுபொருட்களை எடுத்து சாப்பிட்டது. அதன்பின் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வீசி சேதப்படுத்திது. இது தொடர்பாக தகவலறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட […]
