மதுரை யானைகல் தரைப் பாலத்தின் கீழ் வைகை ஆற்று வெள்ளப் பெருக்கில் எச்சரிக்கையை மீறி வாகன ஓட்டிகள் செல்லும் போது கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக உபரிநீர் வைகை […]
