சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவாவை போலீசார் கைது செய்தனர். டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் பிரிவில், ரஷிய வீராங்கனையான சிஜிக்கோவா 101வது இடத்தில் உள்ளார் . இவர் கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவுக்கான ,முதல் சுற்றுப் போட்டியில் மேடிசனுடன் இணைந்து , ருமேனியாவை சேர்ந்த ஆண்ட்ரியா- பாட்ரிஷியா ஜோடிக்கு எதிராக விளையாடி, தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியின் முடிவு குறித்து வழக்கத்தைவிட, அதிகமானவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. […]
