கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கியுள்ளது. இதன் விலை 35 ரூபாய். கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை 1,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் இதனை விற்பனை செய்வதற்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த மாத்திரையினால் அறியப்படுகின்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாக கூறி இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் […]
