சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]
