இந்தியாவில் மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்த சட்டத்தை தற்போது தமிழகத்தில் நிறைவேற்றி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளனர். இந்த அரசாணை கடந்த புதன் கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் மட்டும் இன்றி சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்யலாம். […]
