சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சிவன்மலை அடிவாரம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்ட் தொழிலாளியான நாகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் திருப்பூர் பகுதியில் இரவு நேரம் முழுவதும் வேலை செய்துவிட்டு மறுநாள் காலையில் காங்கேயம் சாலை வழியாக சிவன்மலையில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது புதுப்பாளையம் பகுதியில் சென்று […]
