மோட்டார் சைக்கிள், லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கியிருந்து விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரதீப் தனது உறவினரான பழனியம்மாள் மற்றும் பழனியம்மாள் மகன்களான சஞ்சய், சரவணன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் […]
