மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மீன் வியாபாரி படுகாயமடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் முனிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முனிய செல்வம் காயல்பட்டினம் கொம்புத்துறையில் மீன் விற்பனைக்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முனி செல்வம் மீது மோதியது. இந்த விபத்தில் முனிய செல்வத்திற்கு முகத்திலும், தொடையிலும் பலத்த காயம் […]
