லாரி அடுத்தடுத்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது டூவிபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் காற்றாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
