மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவடி பகுதியிலுள்ள பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவரும் மாவடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் தொழிலாளியான முகுந்தன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருக்குறுங்குடியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மலையடிபுதூர் பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள […]
