மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தவனம்பாளையம் பகுதியில் விவசாயியான ஆ.துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை துரைசாமி நந்தவனம்பாளையத்தில் இருந்து ஜல்லிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த துரைசாமியை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தாராபுரம் […]
