பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 68,600 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்டையன்குடிகாடு […]
