பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர் கனிமொழி தலைமையில் எசனைக் காட்டு மாரியம்மன் கோவில் பகுதி அருகில் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.5 லட்சம் பணம் […]
