மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் நவநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்னாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நவநாயகம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புதியம்புத்தூரில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இந்திராநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரத்னாதேவி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்னா தேவியை உடனடியாக மீட்டு […]
