மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் ஸ்டாலின் மற்றும் அவரின் நண்பரான விக்னேஷ் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் குலசேகரம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரின் நண்பரான விக்னேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அருகில் […]
