மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறி கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் அழகிய நம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பகுதிக்கு தனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மலையடிபுதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அழகிய நம்பி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் […]
