புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாதேபுரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷினி யாதவ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ராகுல் காந்தி கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் […]
