பாஜக மூத்ததலைவர் எல்.கே. அத்வானியின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். இது தொடர்பாக டுவிட்டரில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட செய்தியில் “மதிப்பிற்குரிய அத்வானியின் வீட்டிற்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்டஆயுளுக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் […]
