சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில […]
