ஏ.டி.எம் கார்ட்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ரங்கராஜ்(37). இவருடைய செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களின் ஏ.டி.எம் கார்டு கால அவகாசம் முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக ஏ.டி.எம் கார்டை புதுப்பியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஏ.டி.எம் கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை உடனே […]
