கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கனிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி மகன் சிபிசரண் (36). இவர் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இருப்பதாவது “நான் காவேரிப் பட்டிணத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக் கடன் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்தேன். அப்போது வங்கிக்கு அடிக்கடி வந்துசென்ற தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (48) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரிடம் […]
