பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கூடல்வாடி, பெரிய மாஞ்சாங்குப்பம், சிறிய மாஞ்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தங்களிடம் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு லட்சம் கட்டினால் 2 லட்சம் பணத்தை ஐந்து வருடங்களில் திரும்ப பெற்றுவிடலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள். அதை […]
