கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமலும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றி திரிகிறார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் யாராவது உணவு கொடுத்தால் முதியவர் அதனை வாங்கி சாப்பிடுவார். இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் எனக்கூறி நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். மேலும் முதியவருக்கு அருகே அவர்கள் ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் […]
