மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை தொப்பம்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தில் ஆறுமுகத்திற்கு பணம் எடுக்க தெரியவில்லை. அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபரும், பெண்ணும் இணைந்து ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளனர். அதன்படி 3000 ரூபாய் பணத்தையும், ஏ.டி.எம் கார்டையும் அந்த வாலிபர் ஆறுமுகத்திடம் […]
