பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர், நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சலில் நகல் எடுத்த சம்பவம் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மொழிபெயர்ப்பாளரார்களாக பணியாற்றிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த 250 நபர்களுக்கு தலிபான்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையால், ஆத்திரம் அடைந்துள்ள பாதுகாப்பு செயலர், பென் வாலஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் இராணுவத்திற்காக பணிபுரிந்த, 250 மொழிபெயர்ப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற கோரியிருந்தார்கள். எனவே, அவர்களின், தகவல்களை, பாதுகாப்பு அமைச்சகம் கேட்டபோது […]
