தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு,கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பண தேவை இருக்கும் சமயத்தில் அப்பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம். அவ்வகையில் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் 100 கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு அசைவ விருந்து […]
