காரும், மொப்பட்டும் மோதிக்கொண்ட விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமி கோவில் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மீன் விற்பனை தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொபட்டில் திரும்ப புறப்பட்டு கதீட்ரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று திடீரென இவரின் மொப்பட்டின் மீது மோதி […]
