இருசக்கர வாகன விபத்தில் காவலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம்போல தனது மொபட்டில் தீவன ஆலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த […]
