மொபட் மீது வேன் மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1\2 வயது குழந்தையான சஞ்சய் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணேசன் தனது மொபட்டில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோபியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கிக்கொண்டு திரும்பி […]
