மொபட்டிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி மருந்து வாங்குவதற்காக சிறுவாச்சூரில் உள்ள மருந்தகத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவாச்சூர் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டிலிருந்து நிலைதடுமாறி பெரியசாமி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் […]
