மொபட் நிலை தடுமாறிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவருடைய உறவினரான முருகேசன் என்பவரும் மொபட்டில் தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மொபட்டை செந்தில்குமார் ஓட்டினார். பின்னிருக்கையில் முருகேசன் அமர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பச்சாகவுண்டன் வலசு பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது […]
