பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகன கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, அரசு மருத்துவமனை போன்ற போலீஸ் நிலைய எல்லைகளில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே நபர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி சென்றது கேமராக்களில் பதிவாகி இருந்தது. […]
