இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்களை களம் கொண்ட தொகுதி மொடக்குறிச்சியாகும். தேர்தல் சீர்திருத்தத்திற்கு காரணமாக அமைந்ததும் இந்த தொகுதிதான். நதிகள் இணைப்பு விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1996 ஆம் ஆண்டு 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி மொடக்குறிச்சியாகும். கொடுமுடி, சிவகிரி, அர்ச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், 730 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]
