இந்தியாவில் 18 வயதிற்கு குறைவாக உள்ள நபர்கள்யாருக்கும் சிம் கார்டுகள் வழங்க கூடாது என இந்திய தொலைத் தொடர்புத்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. புதிதாக சிம்கார்டு மைனர் அல்லது தகுதியற்ற சிறார்களுக்கு விற்பது தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரின் சட்டவிரோத செயலாகும். பெற்றோர்கள் இல்லாமல் சட்டபூர்வ பாதுகாவலரின் கீழிருக்கும் நபர்களுக்கான வயது 21 என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
