தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றுவரும் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன பணிகளை வழங்கிய பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இருந்து மாதிரிகள் சேர்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் அரசுக்கு […]
