மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]
