எச்.ராஜா மீது கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் அருகே இருக்கும் மேற்பனைக்காடு கிராமத்தில் அறக்கட்டளை என்ற பெயரில் வழிபாட்டுத் தலத்தை கட்டியுள்ளார் முகமது அலி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் போராட்டம் ஊர்வலமாக நடந்த நிலையில் வருகிற 13ம் தேதிக்குள் வழிபாட்டுத்தலம் அகற்றப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா எழுதிக்கொடுத்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தின்போது எச்.ராஜா […]
