ராமநாதபுரத்தில் வெளியேறியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலந்தைகுளம் சாலையில் 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சாயல்குடி அடுத்த […]
