திருநெல்வேலியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளையும், 7 தமிழர்களையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தொகுதி தலைவர் […]
