மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று […]
