அரக்கோணம் அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்ற நிலையில் அரக்கோணத்தை அடுத்து இருக்கும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் பெய்த மழையால் அலமேலு(90) என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தாசில்தார், வருவாய் துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் […]
