பிரசித்தி பெற்ற கோவிலின் மேற்கூரையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நடை வருகிற 6-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கோயிலின் கருவறைக்கு மேலே அமைந்துள்ள தங்கக் கூரையில் 13 இடங்களில் மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க கூரையை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகளை பிபி […]
