மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் மேரிலாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 6 நவம்பர் 1964 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் […]
